பேராவூரணியில் ஏடிஎம் கார்டு நூதன முறையில் பணம் திருடும்.
அக்டோபர் 22, 2017
0
பேராவூரணியில் ஆவணம் ரோடு முக்கத்தில் கடை வைத்திருப்பவா் ஷாப் ராமதாஸ் இவரிடம் நேற்று மதியம் பேங்க் ஆஃபிசா் போல தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்களது SBI ATM கார்டு காலாவதியாகிவிட்டது என கூறி கார்டில் இருக்கும் தங்களது 16 டிஜிட் நம்பரை கூறுமாறும் அதன் பின்னர் தொலைபேசிக்கு OTP நம்பர் வரும் அதையும் கூறுமாறும் சொல்லியிருக்கிறாா் அந்த அடையாளம் தெரியாத நபர் அதே போல அவரும் அந்த அடையாளம் தெரியாத நபரிடம் ரகசிய நம்பர் மற்றும் OTP நம்பர் ஆகியவற்றை கூறியுள்ளார். ரகசிய நம்பர் பரிமாறப்பட்ட சிறிது நேரத்திலேயே ராமதாஸ் அவர்கள் கணக்கில் இருந்து ரூ.7000 திருடப்பட்டுள்ளது.இந்த சம்பவத்தை பேராவூரணி State bank-ல் கூறியுள்ளார் பணத்தை திரும்ப பெற்றுத் தருமாறும் கேட்டுள்ளார். அதற்கு வங்கி ஊழியர் இது போன்ற தவறுகள் நடக்கும் போது வங்கி மூலமாக எந்த நடவடிக்கையும் உதவியும் செய்ய இயலாது என கூறிவிட்டனர்.இது போன்ற அடையாளம் தெரியாத நபர் போனில் தொடர்பு கொண்டு தங்களின் பேங்க் தகவல்களை கேட்டால் போலீஸில் புகார் செய்ய வேண்டுமா? என்று கேட்டால் போதும் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தொடர்பினை துண்டித்து விடுவார்கள் தயவு செய்து இது போன்ற போன் வரும் போது கவனமாக இருங்கள் என்று அனைத்து வங்கிகளும் எச்சரிக்கை செய்துள்ளனர்.. பணத்தை பறி கொடுத்த ராமதாஸ் அவர்களுக்கு உதவுமாறு பேராவூரணி ஸ்டேட் வங்கிக்கு பொதுமக்கள் சார்பில் அறிவுறுத்துகிறோம். வணிகருக்கு ஏற்பட்ட இந்நிலை நாளை ஏழை எளிய மக்களுக்கும் நடக்கும் எனவே அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்று பேராவூரணி டவுன் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்...
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க