பேராவூரணி பகுதியில் கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு செய்தார்பேராவூரணி பேரூராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பேராவூரணி பகுதியில் கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு செய்தார். அப்போது தாசில்தார் அலுவலகம் முன்பாக உள்ள பாசன வாய்க்காலில் சாக்கடை நீர் தேங்கி நிற்பது, குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளதை பார்வையிட்டார். பின்னர் குப்பைகளை உடனடியாக அகற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் கருவூலம், வேளாண்மைத்துறை அலுவலகம் அமைந்துள்ள பகுதிகளில் ஆய்வு செய்து நெடுஞ்சாலைத்துறை அலுவலக வளாகத்தில் குப்பைகள், செடி, கொடிகளை அகற்றுமாறு உத்தரவிட்டார். மேலும் அங்கு இருப்பு வைக்கப்பட்டிருந்த தார் டின்களில் மழைநீர் தேங்கி கொசுப்புழு உற்பத்தியாகும் சூழல் இருந்ததால் நெடுஞ்சாலைத்துறையினருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்க சுகாதாரத்துறையினருக்கு உத்தரவிட்டார். பட்டுக்கோட்டை ஆர்டிஓ கோவிந்தராசு, வட்டார மருத்துவ அலுவலர் சவுந்தரராஜன் மற்றும் சுகாதாரத்துறையினர் உடனிருந்தனர்.
நன்றி:தினகரன்
டெங்கு காய்ச்சல் பாதிப்பு பேராவூரணியில் கலெக்டர் ஆய்வு.
அக்டோபர் 05, 2017
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க