பேராவூரணியில் டெங்கு தடுப்பு ஆலோசனை கூட்டம்.
அக்டோபர் 21, 2017
0
பேராவூரணி தாசில்தார் அலுவலகத்தில் அனைத்துத்துறை அலுவலர்கள் பங்கேற்ற டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை ஆலோசனை கூட்டம் நடந்தது. தாசில்தார் பாஸ்கரன், வட்டார மருத்துவ அலுவலர் சவுந்தர்ராஜன் முன்னிலை வகித்தனர். உதவி கலெக்டர் லலிதாவதி பேசுகையில், தஞ்சை மாவட்டத்தில் டெங்கு பாதிப்பில் பேராவூரணி பகுதி முதல்நிலையில் உள்ளது.
அனைத்துத்துறை அலுவலர்களின் ஒத்துழைப்புடன் தான் டெங்குவை கட்டுப்படுத்த முடியும். கிராம வாரியாக ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். வாரம்தோறும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்து குளோரினேசன் செய்யப்பட்ட குடிநீர் வழங்கியதை உறுதி செய்ய வேண்டும். காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
செருவாவிடுதி தரம் உயர்த்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார். முன்னதாக பைங்கால் கிராமத்தில் அதிகளவில் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் ஆய்வு மேற்கொண்டு மருத்துவ முகாம் மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பேராவூரணி குமரவடிவேல், சித்ரா, சேதுபாவாசத்திரம் கிருஷ்ணமூர்த்தி, பிரபாகரன் பங்கேற்றனர்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க