பேராவூரணி நாளை வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்.
அக்டோபர் 22, 2017
0
இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியவாறு 3.10.2017ம் தேதியன்று தஞ்சை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்ட, நீக்கம் செய்யப்பட வேண்டியமற்றும் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் கடந்த 3ம் தேதி முதல் வரும் 31ம் தேதி வரைமேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் உள்ள 2,175 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம் நாளை (22-ந் தேதி) சிறப்பு முகாம் நடக்கிறது.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தேவையான தேர்தல் படிவங்களு டன் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை பணியில் இருப்பர். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்ப டுத்தி வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாத 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் அதாவது 31.12.1999ம் தேதி வரை பிறந்தவர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க தொடர்பு டைய வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று உரியபடிவங்களை பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம். நீக்கம் செய்ய அல்லது திருத்தம் மேற்கொள்ள உரியபடிவங்களை தொடர்புடைய வாக்குச் சாவடி நிலை அலுவலர்க ளிடம் பெற்று பூர்த்தி செய்து அவர்களிடமே அளிக்க லாம். வாக்காளர் பட்டியலில் பொது மக்கள் தங்கள் பெயர் இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க