எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பேராவூரணியில் விளையாட்டு போட்டி.
அக்டோபர் 26, 2017
0
பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள்முதலமைச்சர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி புதன்கிழமையன்று விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.வேளாண்மை துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு தலைமையேற்று விழாவைதொடங்கி வைத்தார். மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம், மக்களவை உறுப்பினர்கள் தஞ்சாவூர் கு.பரசுராமன், மயிலாடுதுறை பாரதிமோகன், மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை ஆகியோர் பங்கேற்றனர். தொடர்ந்து சேதுபாவாசத்திரம் பகுதியில் நடைபெற்ற மீனவர்களுக்கான படகுப்போட்டியை தொடங்கி வைத்தனர். முன்னதாக புனல்வாசல் கிராமத்தில் நடைபெற்ற பொது மருத்துவ முகாம் மற்றும் காலகம் கிராமத்தில் நடைபெற்ற கால்நடை மருத்துவ முகாம் ஆகியவற்றிலும் அமைச்சர் மற்றும் எம்.பி.க்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.இவ்விழாவில் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க