பேராவூரணி அருகே சிஐடி என கூறி பணம் பறித்த வாலிபரை விட்டுவிட சொன்ன போலீஸ் மக்கள் அதிர்ச்சி.

Unknown
0


பேராவூரணி அருகே ரெட்டவயல் பகுதியில் ஒரு சொகுசு காரில் வந்த இளைஞர், ஒதுக்குப்புறமான இடத்தில் நின்று வாகனங்களில் செல்வோரை மிரட்டி நேற்று முன்தினம் மாலை பணம் பறித்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், ரெட்டவயல் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தினருக்கு தகவல் அளித்தனர். இதைதொடர்ந்து ரெட்டவயல் கிராமத்தில் உள்ள கடைகளுக்கு சென்று மிரட்டி பணம் பறிக்க வாலிபர் முயன்றார். கடைவீதியில் வந்து வசூல் வேட்டையில் ஈடுபட்டதால் சந்தேகமடைந்து அந்த வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். அப்போது தான் சிஐடி போலீஸ் எனக்கூறி அடையாள அட்டையை காட்டியுள்ளார்.
அந்த அடையாள அட்டையில் நந்தகுமார், நாகை மாவட்டம் சிவில் சப்ளை சிஐடி என இருந்துள்ளது.

இவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த பொதுமக்கள், அந்த நபரை பிடித்து பேராவூரணி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். ஆனால் அங்கிருந்து காவலர்கள் யாரும் வரவில்லை. இதனால் மறுபடியும் காவல் நிலையத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது பட்டுக்கோட்டைக்கு முதல்வர் வருவதால் பாதுகாப்பு பணிக்கு போலீசார் சென்றுவிட்டனர். இதனால் காவல் நிலையத்தில் வாலிபரை ஒப்படையுங்கள், இல்லாவிட்டால் வாலிபரை விட்டு விடுங்கள் என்று கூறியுள்ளனர். இதனால் அந்த நபரை போலீசார் விட்டுவிட்டனர்.
வசூல் வேட்டையில் ஈடுபட்ட நபர் உண்மையிலேயே காவல்துறையை சேர்ந்தவரா, இல்லை சிவில் சப்ளைஸ் பிரிவு சிஐடியா என்பது தெரியவில்லை. இதுகுறித்து எஸ்பி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top