பேராவூரணி அடுத்த படப்பனார்வயல் அங்கன்வாடி கட்டிடம் சீரமைக்கப்படுமா.
அக்டோபர் 03, 2017
0
பேராவூரணி அருகே உள்ள படப்பனார்வயல் கிராமத்தில் பாதுகாப்பற்ற நிலையில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்தி ற்குட்பட்ட சொர்ணக்காடு ஊராட்சி படப்பனார்வயல் கிராமத்தில், ஒருங்கிணை ந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. கட்டிடம் சேதமடைந்து, கதவு உடைந்து அங்கு வரும் குழந்தைகள் மீது விழும் அபாயநிலையில் உள்ளது. குழந்தைகளை அனுப்ப பெற்றோர்கள் தயங்கும் அளவுக்கு அதன் பராமரிப்பு உள்ளது. சமையல் கூடம், சுகாதார வளாகம் என அனைத்தும் பயன்பாடு இன்றியும் தண்ணீர் இன்றியும் சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது. அங்குள்ள தண்ணீர் தொட்டி பாசி படர்ந்து, பல மாதங்களாக சுத்தம் செய்ய ப்படாமல் உள்ளது. பேராவூரணி பகுதி முழுவதும் மர்மக் காய்ச்சல் பரவி வரும் நிலையில் தொடர்புடைய துறையினர் அங்கன்வாடி மையத்தை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நன்றி:தீக்கதிர்
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க