பேராவூரணியில் தீபாவளி வியாபாரம் மந்தம் வணிகர்கள் கவலை.
அக்டோபர் 16, 2017
0
பேராவூரணி நகரில் தீபாவளி பண்டிகைக்கான வியாபாரம் சூடுபிடிக்கவில்லை என வியாபாரிகள் கவலையுடன் தெரிவித்துள்ளனர். பேராவூரணியைச் சுற்றிலும் 140-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள், பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்காக பேராவூரணி வந்து செல்கின்றனர்.
தீபாவளிப் பண்டிகையையொட்டி பேராவூரணியில் விற்பறை சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த அளவில் வியாபாரம் தீவிரமடையவில்லை என வியாபாரிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பேராவூரணி டவுன் ஊடக செய்தியாளர் வணிகர் ஒருவருடன் பேசிய போது, விலைவாசி உயர்வு, பணப்புழக்கம் இல்லாததால் அனைத்து வியாபாரங்களும் மந்தமாக உள்ளன. இன்று திங்கள்க்கிழமைகளில் வியாபாரம் சூடுபிடிக்கலாம் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தனர்.
மேலும் நகைக் கடை வணிகர் ஒருவர் கூறுகையில், புரட்டாசி மாதத்தில் இருந்து போதிய வியாபாரம் இல்லை. தீபாவளி வியாபாரம் மந்தமாக உள்ளது என்றார்.
ஐவுளிக்கடை உரிமையாளர் ஒருவர் கூறுகையில், கடந்த காலங்களில் பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாள்களில் மட்டுமே பெரும்பாலோர் புதிய ஜவுளிகள் வாங்குவர். தற்போது நிலைமை மாறிவிட்டது. அடிக்கடி துணிகள் வாங்குவதால், தற்போது மக்களிடம் போதிய வரவேற்பு இல்லை என்றார்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க