ஒட்டங்காடு இணைப்பு சாலை குண்டும் குழியுமாக மாறிய பள்ளத்தூர் சாலை சீரமைக்கப்படுமா.
அக்டோபர் 21, 2017
0
ஒட்டங்காடு இணைப்பு சாலை குண்டும் குழியுமாக மாறிய பள்ளத்தூர் சாலை சீரமைக்கப்படுமா.
ஒட்டங்காடு இணைப்பு சாலை குண் டும் குழியுமாக போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. இந்த சாலை விரைந்து சீரமைக்கப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
பட்டுக்கோட்டை சாலையிலிருந்து பிரிந்து பள்ளத்தூர், பூவாணம், புக்கரம்பை, கட்டையங்காடு வழியாக இணைப்பு சாலை செல்கிறது. இந்த சாலையை இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பட்டுக்கோட்டை, பேராவூரணி போன்ற பகுதிகளுக்கு செலலபயன் படுத்தி வருகின்றனர். இதன் வழியாக அரசு பேருந்து ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக 5 கிலோ மீட்டர்தூரம் குண்டும், குழியுமாககாட்சியளிக்கிறது. இந்த சாலையில் இருசக்கரவாகனம் கூட செல்ல முடியவில்லை. ஒத்தையடி பாதைபோல் உள்ளது. பள்ளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சைக்கிளில் செல்லக் கூடிய மாணவ, மாணவிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பல முறைமனு அளித்தும் இது வரைநடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கலெக்டர் அண்ணாதுரை விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண் டு மென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க