திருச்சிற்றம்பலத்தில் டெங்கு தடுப்புதினம் தொடக்க விழா.
அக்டோபர் 06, 2017
0
பேராவூரணி அடுத்த திருச்சிற்றம்பலத்தில் அக்டோபர் 5 வியாழக்கிழமை அன்று டெங்கு தடுப்புதினம் தொடக்க விழா வட்டாரமருத்துவ அலுவலர் டாக்டர்வி.சௌந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராசு கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். பின்னர் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை வழங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி.சௌந்தரராஜன் கூறுகையில், நடமாடும் பொது மருத்துவக் குழு மற்றும் 2 பள்ளி சிறார்மருத்துவக்குழு மூலம் கிராமங்கள் மற்றும் பள்ளிகள் தோறும் டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம், மருத்துவ முகாம், நிலவேம்பு குடிநீர்வழங்கல் மற்றும் ஒட்டுமொத்த சுகாதார பணிகள் நடத்தப்படும் என்றார்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க