பேராவூரணி அடுத்த குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப்பள்ளியில் மருத்துவ முகாம்.
அக்டோபர் 12, 2017
0
பேராவூரணி அடுத்த குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப்பள்ளியில் மருத்துவ முகாம் ம்ற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமையன்று பள்ளி தலைமையாசிரியர் வீ.மனோகரன் தலைமையில் நடைபெற்றது.இம்முகாமில் சேதுபாவாசத்திரம் வட்டார சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ அலுவலர்கள் டாக்டர்கள் லியோ கிளிண்டன், பிரியங்கா, சித்தா பிரிவு மருந்தாளுநர் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டு மாணவர்களைபரிசோதித்து, பின்னர் நிலவேம்பு குடிநீர் வழங்கினர். மாணவ, மாணவிகளுக்கு சுகாதார விழிப்புணர்வு நலக்கல்வி வழங்கப்பட்டது. இதில் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க