பேராவூரணி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்.
அக்டோபர் 08, 2017
0
பேராவூரணி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் இன்று நடக்கிறது. வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் உள்ளிட்ட பணிகளுக்காக, பேராவூரணி உள்ள வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம், முதல்கட்டமாக இன்று அக் 8 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் நடைபெறுகின்றன.
இதில், பேராவூரணி உள்ள வாக்குச் சாவடி மையங்களிலும், வரைவு வாக்காளர் பட்டியல் வாக்காளர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
பேராவூரணி உள்ள அனைத்து வாக்காளர்களும் தாங்கள் வாக்களித்து வரும் வாக்குசாவடி மையத்திற்கு (Booth) சென்று தமது பெயர் வாக்காளர் பட்டியலில் தவறு ஏதுமின்றி சரியாக இடம் பெற்றுள்ளதா என்பதனை சரி பார்த்து உறுதி செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், புதிதாக வாக்காளர் பட்டியலில் இடம்பெற படிவம் 6- ஐ அந்தந்த வாக்குச்சாவடி அலுவலரிடம் பெற்று பூர்த்தி செய்து உரிய சான்றாவணங்களுடன் தொடர்புடைய வாக்குச்சாவடி அலுவலரிடமே 31-10-2017 வரை அளிக்கலாம். பெயர் நீக்கம் செய்திட படிவம் 7 - ஐ பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். பெயர் மற்றும் முகவரியில் திருத்தம் ஏதும் செய்யப்படவேண்டின், படிவம்-8 ஐ பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம். அதே தொகுதியில் முகவரி மாற்றம் செய்யப்பட வேண்டின், படிவம் 8A - ல் பூர்த்தி செய்து அளிக்கலாம்.
இவ்வாய்ப்பினை பேராவூரணி பகுதி பொது மக்கள் பயன்படுத்திக்கொண்டு தங்கள் பெயர் வாக்காளர் பட்டிலில் பிழையின்றி இடம் பெற்றுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
மேலும், இரண்டாவது கட்டமாக வரும் அக். 22 ந் தேதி வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க