பேராவூரணி நகரம் தீபாவளி இருட்டில் பகலாக மாறியது.
அக்டோபர் 19, 2017
0
பேராவூரணி உட்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தீப ஒளித் திருநாளை பொதுமக்கள் ஆனந்தமாக கொண்டாடினர். பேராவூரணியின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதலே பட்டாசு வெடிசத்தத்தால் தீபாவளி களைகட்டியது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மத்தாப்பு, சங்கு சக்கரம், பூத்தொட்டி, ராக்கெட் உள்ளிட்ட வெடிகளை வெடித்து தீபாவளி பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடினர். புதுமணத் தம்பதிகள் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர். பேராவூரணியில் மாலை நேரத்தில் வெடிக்கப்பட்ட கண்ணை கவரும் வண்ண வண்ண வான வெடிகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க