இந்தியாவிலேயே தூய்மையான சின்னமாக மதுரை மீனாட்சியம்மன் கோவில் தேர்வு.
அக்டோபர் 03, 2017
0
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா,ஜ,க, அரசு பொறுப்பேற்ற போது, தூய்மை இந்தியா திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதிலும் உள்ள சுற்றுலாத்தலங்கள் உள்பட முக்கிய இடங்களை தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வரும் பல்வேறு இடங்களுக்கு மத்திய அரசின் குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியம் விருது வழங்கி வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பராமரிக்கப்படும் மதுரை மீனாட்சியம்மன் கோவிலை பத்தாவது இடத்துக்கு தேர்வு செய்துள்ளனர் என மதுரை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மதுரை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில், மத்திய அரசின் சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பத்து புனித இடங்களில் மதுரை மீனாட்சியம்மன் கோவில் முதலிடம் பிடித்துள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளது.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க