பேராவூரணி வட்டாரத்தில் விவசாயிகளுக்கு விதை உற்பத்தி பயிற்சி.
அக்டோபர் 09, 2017
0
பேராவூரணி வட்டாரத்தில் அம்மா திட்டத்தின்கீழ் பாலத்தளி கிராமத்தில் விதை பண்ணை விவசாயிகளுக்கு தரமான விதை உற்பத்தி பயிற்சி வகுப்பு நடந்தது.விதைச்சான்று துறை வேளாண்மை அலுவலர் சாந்தி தலைமை வகித்தார். பேராவூரணி வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுரேஷ் வரவேற்றார். பயிற்சியில் தரமான விதை உற்பத்தி தேர்வு செய்யும் முறை, விதைப்பண்ணை அமைக்கும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. நடப்பாண்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்கள் மற்றும் மான்ய விவரங்கள் குறித்து வேளாண்மை உதவி அலுவலர் சசிக்குமார் பேசினார். பயிற்சியில் விதைப்பண்ணை விவசாயிகள் 40 பேர் பங்கேற்றனர்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க