ஆனந்தவல்லி வாய்க்காலில் முழுமையாக தண்ணீர் திறந்து விடாவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சை கலெக்டருக்கு கழனிவாசல் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் கோரிக்கை மனு அனுப்பினார். அதில் ஆவணத்திலிருந்து பிரியும் ஆனந்தவல்லி கிளை வாய்க்காலில் இருந்து பழைய நகரம், மாவடுகுறிச்சி, பொன்காடு, பேராவூரணி, முடப்புளிக்காடு, நாட்டாணிக்கோட்டை, கழனிவாசல், சோழகனார்வயல், கொரட்டூர் உள்ளிட்ட கடைமடை பகுதிகளை சேர்ந்த 500 எக்டேர்பரப்பளவு நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
கல்லணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு 25 நாட்களுக்கு மேலாகியும் கடைமடை பகுதியான கழனிவாசல், கொரட்டூருக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. கடந்த 4 ஆண்டுகளாகவே விவசாயம் பொய்த்துப் போன நிலையில் இந்தாண்டு விவசாய பணிகள் மேற்கொள்ளலாம் என்ற சூழ்நிலையில் விவசாயிகள் இருந்தனர். ஆனால் கடை மடை பகு திக்கு இது வரை தண் ணீர் வந்து சேரா மல் உள் ளது.
இயற்கை பொய்த் து விட்ட நிலை யில் கிளை ஆறு கள், வாய்க் கால் களை தூர் வா ரா த தால் தண் ணீர் வர வில்லை. இத னால் ஏரி, குளங் கள் நிரம் பால் உள் ளது. ஆறு க ளில் தண் ணீர் வரா த தா லும், மழை இல் லா மல் போன தா லும் நிலத் தடி நீர் மட் டம் குறைந் தது. எனவே பொதுப் ப ணித் துறை அலு வ லர் கள் தலை யிட்டு கடை மடை பகு திக்கு முறை வைக் கா மல் தண் ணீர் திறந்து விட நட வ டிக்கை எடுக்க வேண் டும் என்று தெரி விக் கப் பட் டுள் ளது.
ஆனந் த வல்லி கிளை வாய்க் கா லில் தண் ணீர் முழு மை யாக திறந்து விடா விட் டால் பொது மக் களை திரட்டி மறி யல் போராட் டம் நடத் தப் ப டும் என்று தெரி விக் கப் பட் டுள் ளது.