பேராவூரணி அரசுக்கல்லூரியில் சிறப்பு கருத்தரங்கம்.
அக்டோபர் 07, 2017
0
பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரியில், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்றம் சார்பில் ‘கிராமப்பகுதிகளில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாடுகள்’ என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் வியாழக்கிழமையன்று நடைபெற்றது.கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் (பொ) சி.இராணி தலைமை வகித்தார். கணிதத்துறை பேராசிரியர் ஜி.மோகனசுந்தரம் வரவேற்றார். பேராசிரியர் இ.பிரபா வாழ்த்திப் பேசினார்.தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரி வேதியியல் துறைபேராசிரியர் ந.புனிதா கலந்து கொண்டு, “உணவுகலப்படத்தை கண்டறிதல்” குறித்து சிறப்புரையாற்றினார். ஆஸ்ட்ரா ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ந.மகேஸ்வரிதொகுப்புரையாற்றினார். பேராசிரியர் எஸ்.நித்யசேகர் நன்றி கூறினார்.புரொஜெக்டர் ஒளித்திரை மூலம் உணவுக்கலப்படம் கண்டறிதல் குறித்து கருத்தரங்கில் விளக்கப்பட்டது. வாத்தலைக்காடு கிராமத்தினர், கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க