தீபாவளி பண்டிகை வருவதையொட்டி பிளிப்கார்ட் அதிரடி ஆப்பர்.
அக்டோபர் 06, 2017
0
தீபாவளி பண்டிகை வருவதையொட்டி பிளிப்கார்ட் "ஃபெஸ்டிவ் தமாக்கா சேல்" என்ற சிறப்பு சலுகை விற்பனையினை அறிவித்துள்ளது. ஆன்லைன் ஷாப்பிங்கில் மக்களிடையே மிகவும் பிரபலமான பிளிப்கார்ட் நிறுவனம் பண்டிகை காலங்களில் தொடர்ந்து சிறப்பு தள்ளுபடி விற்பனைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்த மாதத்தில் தீபாவளி பண்டிகை வருவதையொட்டி "ஃபெஸ்டிவ் தமாக்கா சேல்" என்ற சிறப்பு விற்பனை இன்று முதல் ஆரம்பமாகிறது. தேர்வு செய்யப்பட்ட சாதனங்களுக்கு சிறப்பு விற்பனையில் எக்சேஞ்ச் சலுகை, வட்டியில்லா மாத தவணை முறை வசதி உள்ளிட்டவை வழங்கப்படுவது கூடுதல் சிறப்பு. மேலும் இந்த சிறப்பு விற்பனையில் லேப்டாப், டேப்லெட், ஹெட்போன்கள், கேமரா போன்ற சாதனங்களுக்கும் தள்ளுபடி மற்றும் விலை குறைப்பில் வழங்கப்படுகின்றன. அதேபோல் ஆப்பிள் ஐபோன், லெனோவோ, ரெட்மி நோட், மோட்டோ போன்ற பிரபல மொஃபைல் போன்களின் விலை மற்றும் மாத தவணையில் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க