1000 கிலோ அரிசி; 600 கிலோ காய்கறிகள்: பிரமாண்ட பிரகதீஸ்வரருக்கு அலங்காரம்.
நவம்பர் 04, 2017
0
தஞ்சாவூர் பெரியகோயில் என்று அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோயிலில், வருடந்தோறும் ஐப்பசி அன்னாபிஷேகப் பெருவிழா விமரிசையாக நடப்பது வழக்கம். இன்று பிரமாண்டமாக நடந்தேறியது விழா!
வருடந்தோறும் ஐப்பசி மாத பெளர்ணமி நன்னாளில், அன்னாபிஷேக விழா விமரிசையாக நடைபெறும். இந்தவருடமும் தஞ்சாவூர் பெரிய கோயிலில் இன்று கோலாகலமாக நடைபெற்றது விழா.
ஐப்பசி மாதத்தில் இரண்டு விழாக்கள் இங்கே மிகவும் பிரசித்தம். முதலாவதாக ஐப்பசி மாதத்தின் சதய நட்சத்திர நன்னாள், ராஜராஜ சோழனின் பிறந்தநாள் விழாவாக, சதயப் பெருவிழாவாக நடைபெறும்.
அதையடுத்து, ஐப்பசி பெளர்ணமி அன்று, பெருவுடையார் என்று சொல்லப்படும் பிரகதீஸ்வரருக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்து, அலங்காரங்கள் செய்து, விசேஷ பூஜைகள் நடைபெறும்.
இன்று ஐப்பசி பெளர்ணமி. எனவே காலையில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. மாலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ, அன்னாபிஷேகம் நடந்தது. சிவனாருக்கு 1000 கிலோ அரிசியால் அன்னம் படைத்து அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. அதேபோல், 600 கிலோ காய்கறிகளால் அலங்காரங்கள் செய்யப்பட்டன.
மிக பிரமாண்டமாக நடைபெற்ற அன்னாபிஷேக விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க