பேராவூரணியில் பரவலாக சாரல் மழை 14, மி.மீ. பதிவானது.
நவம்பர் 01, 2017
0
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்புள்ளது. தற்போது பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பரவலாக பெய்து வரும் மழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரை தஞ்சாவூர் மாவட்டதில் பதிவான மழையளவு வருமாறு (மிமீ) பேராவூரணி 14, கும்பகோணம் 91, பாபநாசம் 59, தஞ்சாவூர் 21, திருவையாறு 29, திருக்காட்டுப்பள்ளி 18.2, வல்லம் 39, கல்லணை 7.2, அய்யம்பேட்டை 46, திருவிடை மருதூர் 74.4, மஞ்சளாறு 79.8, நெய்வாசல் தென்பாதி 34.6, பூதலூர் 15.6, வெட்டிக்காடு 25, ஈச்சன்விடுதி 10.2, ஒரத்தநாடு 30.7, மதுக்கூர் 55.8, பட்டுக்கோட்டை 47.4, அதிராம்பட்டினம் 49.5, அணைக்கரை 84.6, குருங்குளம் 15. என மொத்தம் 847 மிமீ மழை பதிவாகியுள்ளது.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க