வரலாற்றில் இன்று நவம்பர் 15.
நவம்பர் 15, 2017
0
நவம்பர் 15 கிரிகோரியன் ஆண்டின் 319 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 320 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 46 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1505 – போர்த்துக்கேய மாலுமியும் நாடுகாண் பயணியுமான லோரன்ஸ் டி அல்மெய்டா, கொழும்பை வந்தடைந்து ஐரோப்பியக் குடியேற்றத்தை ஆரம்பித்தார்.
1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டுப்படைத் தளபதி வில்லியம் ஷேர்மன் அட்லாண்டா நகரைத் தீக்கிரையாக்கி ஜோர்ஜியாவின் சவான்னா துறைமுகம் நோக்கி நகர்ந்தார்.
1889 – பிரேசில் குடியரசாகியது. இரண்டாம் பெதரோ ஆட்சியிழந்தான்.
1926 – என்பிசி வானொலி 24 நிலையங்களுதன் தனது வானொலி சேவையைத் தொடங்கியது.
1941 – நாசி ஜெர்மனியில் சில உயர் அதிகாரிகளைத் தவிர்த்து அனைத்து ஓரினச்சேர்க்கையாளர்களையும் வதைமுகாம்களுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டது.
1942 – இரண்டாம் உலகப் போர்: சொலமன் தீவுகளில் குவாடல்கனல் என்ற இடத்தில் ஜப்பானியப் கடற்படையுடன் இடம்பெற்ற மோதல்களில் கூட்டுப் படைகள் வெற்றி பெற்றன.
1943 – நாசி ஜெர்மனியில் அனைத்து ஜிப்சிகளையும் யூதர்களுக்கு இணையாக வதமுகாம்களுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டது.
1948 – இலங்கையில் மலையகத் தமிழரின் வாக்குரிமை பறிக்கப்பட்டது.
1949 – நாதுராம் கோட்சே, மற்றும் நாராயண் ஆப்டே இருவரும் மகாத்மா காந்தியைக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டனர்.
1966 – ஜெமினி 12 விண்கலம் அட்லாண்டிக் கடலில் பாதுகாப்பாக இறங்கியது.
1969 – வியட்நாம் போர்: வாசிங்டன் டிசியில் 250,000-500,000 பேர் போருக்கெதிராக ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் பங்குபற்றினர்.
1970 – சோவியத்தின் லூனா தானூர்தி சந்திரனில் தரையிறங்கியது.
1971 – இண்டெல் நிறுவனம் உலகின் வர்த்தகரீதியிலான முதலாவது 4004 என்ற single-chip microprocessor ஐ வெளியிட்டது.
1978 – டிசி-8 ரக தனியார் பயணிகள் விமானம் கொழும்புக்கு அருகில் விபத்துக்குள்ளாகியதில் 183 பேர் கொல்லப்பட்டனர்.
1983 – வடக்கு சைப்பிரஸ் துருக்கியக் குடியரசு நிறுவப்பட்டது. துருக்கி மட்டுமே இதனை அங்கீகரித்தது.
1988 – சோவியத் ஒன்றியத்தின் ஆளற்ற பூரான் விண்ணோடம் தனது முதலாவது கடைசியுமான பயணத்தை ஆரம்பித்தது.
1988 – பாலஸ்தீன நாடு பாலஸ்தீன தேசிய கவுன்சிலினால் அறிவிக்கப்பட்டது.
1990 – அட்லாண்டிஸ் விண்ணோடம் STS-38 கப்பலை விண்ணுக்குக் கொண்டு சென்றது.
2002 – ஹூ சிங்தாவ் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனார்.
2000 – இந்தியாவில் ஜார்க்கண்ட் தனிமாநிலமாக உருவாக்கப்பட்டது.
2007 – வங்க தேசத்தில் கிளம்பிய பெரும் சூறாவளியினால் 5,000 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
1738 – வில்லியம் ஹேர்ச்செல், விண்கோள் யுரேனசைக் கண்டு பிடித்த ஜெர்மன் விஞ்ஞானி (இ. 1822)
1914 – வி. ஆர். கிருஷ்ணய்யர், இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி, அமைச்சர் (இ. 2014)
1986 – சானியா மிர்சா, இந்தியாவின் டென்னிஸ் வீராங்கனை
இறப்புகள்
1630 – ஜொஹான்னெஸ் கெப்லர், ஜெர்மானிய கணிதவியலாளரும், வானியலாளரும் (பி. 1571)
1917 – எமில் டேர்க்கேம், பிரெஞ்சு சமூகவியலாளர் (பி. 1858)
1949 – நாத்தூராம் கோட்சே, மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கொலையாளி (பி. 1910)
1949 – நாராயண் ஆப்தே, மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கொலையாளி (பி. 1911)
1961 – இலங்கையர்கோன், ஈழத்துச் சிறுகதை எழுத்தாளர், நாடகாசிரியர்
1982 – வினோபா பாவே, (பி. 1895)
சிறப்பு நாள்
பிரேசில் – குடியரசு நாள் (1889)
பாலஸ்தீனம் – விடுதலை நாள் (அறிவிப்பு: 1988)
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க