பேராவூரணி விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய ஆவணங்கள் பெற நவம்பர் 23,25-ல் சிறப்பு முகாம்.

Unknown
0


நடப்பு பருவத்தில் சம்பா, தாளடி நெற்பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய நவம்பர் 30 அன்று கடைசி நாளகும். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரிலும் மற்றும் தஞ்சாவூர் வேளாண்மை இணை இயக்குநர் அறிவுரைகளுக்கிணங்கவும் நவம்பர் 23, 25 ஆகிய தேதிகளில் அந்தந்த கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலர் தலைமையிட அளவிலேயே சிறப்பு முகாம்ங்கள் நடத்தி பயிர் காப்பீடு செய்வதற்கான சிட்டா-அடங்கல் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சான்று ஆகியவற்றை விரைந்து பெறுவதற்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது.

எனவே நிலஉடமை ஆவணச் சான்றுகள் பெறமுடியாமல் விடுபட்டுப்போன விவசாயிகள் அனைவரும் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெறும் கிராம அளவிலான சிறப்பு முகாம்ங்களில் பங்கேற்று பயன்பெறுமாறு குறிச்சி, திருச்சிற்றம்பலம், பேராவூரணி, ஆவணம், குருவிக்கரம்பை, பெருமகளூர் ஆகிய சரகங்களை சேர்ந்த விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கடைசி நேர நெருக்கடி, அலைச்சல் மற்றும் சிரமங்களை தவிர்த்திடும் பொருட்டு இந்த சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று பேராவூரணி வேளாண்மை உதவி இயக்குநர் ஆர்.மதியரசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top