புதுக்கோட்டை நாட்டுக்கோழி வளர்ப்பு பற்றிய ஒருநாள் பயிற்சி நவம்பர் 28.
நவம்பர் 25, 2017
0
புதுக்கோட்டை நாட்டுக்கோழி வளர்ப்பு பற்றிய ஒருநாள் பயிற்சி நவம்பர் 28.மண்டல ஆராய்ச்சி மற்றும் கல்வி மைய பேராசிரியர் மற்றும் தலைவர் முகம்மது சபியுல்லா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.
புதுக்கோட்டை அண்டக்குளம் சாலையில் அமைந்துள்ள மண்டல ஆராய்ச்சி மற்றும் கல்வி மையத்தில் நாளை மறுநாள் (28ம் தேதி) காலை 10 மணிக்கு நாட்டுக்கோழி வளர்ப்பு பற்றிய ஒருநாள் பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் நாட்டுக்கோழி இனங்கள், கொட்டகை அமைப்பு, தீவனம் தயாரித்தல், இனவிருத்தி, நோய் தடுப்பு முறைகள் குறித்த விரிவான விளக்கவுரையுடன் கூடிய பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சியில் கலந்துகொள்ளும் நபர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க