நோக்கியா 2.
நவம்பர் 01, 2017
0
பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மொபைல் சந்தையில் நுழைந்த நோக்கியா விட்ட இடத்தைப் பிடிக்கும் முயற்சியில் இருக்கிறது. அதற்கு தகுந்தவாறு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஏதாவது ஒரு ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி விடுகிறது. இதில் குறைந்த விலை மற்றும் விலை அதிகம் கொண்ட ஸ்மார்ட்போன்களும் அடக்கம். கடந்த மாதம் நோக்கியா 8 என்ற ஃப்ளாக்க்ஷிப் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் நோக்கியா 2 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 5.0 இன்ச் எச்டி டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 கொண்டு பாதுகாக்கப்படும் நோக்கியா 2 ஸ்மார்ட்போனில் 4100 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
இரண்டு நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் நோக்கியா 2 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்படுகிறது.
நோக்கியா 2 சிறப்பம்சங்கள்:
- 5.0 இன்ச் 1280x720 பிக்சல் எச்டி LTPS LCD டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 212 சிப்செட்
- அட்ரினோ 304 GPU
- 1 ஜிபி ரேம்
- 8 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட்
- டூயல் சிம் ஸ்லாட்
- 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
- 5 எம்பி செல்ஃபி கேமரா
- வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP52)
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 4100 எம்ஏஎச் பேட்டரி
புதிய நோக்கியா 2 ஸ்மார்ட்போன் 6000 சீரிஸ் அலுமினியம் ஃபிரேம் மற்றும் பாலிகார்பனைட் பேக் கொண்டிருக்கிறது. IP 52 தரச்சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கும் நோக்கியா 2 ஸ்மார்ட்போன் பிளாக், வைட் மற்றும் காப்பர் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. நவம்பர் மாத மத்தியில் விற்பனைக்கு வரயிருக்கும் நோக்கியா 2 விலை 99 யூரோ அதாவது இந்திய மதிப்பில் ரூ.7465 என நிர்ணம் செய்யப்பட்டுள்ளது.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க