பேராவூரணி அருகே பயிர் காப்பீடு கேட்டு விவசாயிகள் மறியல் நவம்பர் 30-க்குள் வழங்க அதிகாரிகள் உறுதி.
நவம்பர் 23, 2017
0
பேராவூரணி அருகே அம்மையாண்டி கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பயிர் காப்பீடுத்தொகை வழங்கப்படவில்லை என்று கூறி கிராமமக்கள் மற்றும் விவசாயிகள் செவ்வாயன்று பேராவூரணி - புதுக்கோட்டை சாலையில் ராஜமாணிக்கம் தலைமையில் மறியலில் ஈடுபட முயன்றனர். போராட்ட இடத்திற்கு வந்த பேராவூரணி வட்டாட்சியர் பாஸ்கரன் மற்றும்திருச்சிற்றம்பலம் காவல்துறை ஆய்வாளர் செந்தில்குமரன் ஆகியோர்மறியலில் ஈடுபட முயன்ற செங்கமங்கலம், அம்மையாண்டி கிராம மக்கள்விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக பேராவூரணி தாசில்தார் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணலாம் என்று கூறினார்.
இதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது. பின்னர் செவ்வாய் மாலை வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சியர் பாஸ்கரன் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் வேளாண் அலுவலர் ராணி, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் விவசாயிகள் தரப்பில் இரா.வேலுச்சாமி, அம்மையாண்டி ரவிச்சந்திரன், கருணாநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் நவம்பர் 30 ஆம்தேதிக்குள் பயிர்காப்பீட்டு தொகைகிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதிமொழி அளிக்கப்பட்டது. இதனை விவசாயிகள் ஏற்றுக்கொண்டு போராட் டத்தை ஒத்திவைத்தனர்.
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க