முட்டை விலை கடும் உயர்வு ஒரே நாளில் 42 காசுகள் உயர்ந்தது.
நவம்பர் 16, 2017
0
நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் கூடி முட்டை விலையை நிர்ணயம் செய்து வருகிறது.
கடந்த சில நாட்களாக முட்டை விலை உயர்ந்து வருகிறது. ரூ.4.36 காசுகளாக இருந்த முட்டை கொள்முதல் விலை கடந்த 6-ந்தேதி ரூ.441 என உச்சத்தை தொட்டது. இதனை தொடர்ந்து கடந்த 9-ந்தேதி மேலும் 9 காசுகள் உயர்த்தப்பட்டது. இதனால் முட்டை விலை ரூ.4.50 யை தொட்டது.
ரூ.4.50 காசுகள் எட்டி இருந்த நிலையில் முட்டை கொள்முதல் விலை நேற்று முன்தினம் ரூ.4.74 காசுகளாக உயர்ந்தது.
இன்று ஒரே நாளில் 42 காசுகள் அதிகரித்து முட்டை கொள்முதல் விலை ரூ.5.16 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகத்தில் முட்டை விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் சில்லரை கடைகளில் ரூ.5.50-க்கு விற்கப்பட்டு வந்த முட்டை இனிமேல் ரூ.6-க்கு விற்கப்படும் சூழ்நிலை உள்ளது.
இது பற்றி தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சம்மேளன கவுரவ தலைவர் நல்லதம்பி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
முட்டை உற்பத்தி வழக்கத்தை விட தமிழ்நாட்டில் மட்டும் 30 லட்சம் முட்டைகள் குறைவு.
இந்தியா முழுவதும் மழை பொழிவு அதிகம். மேலும் காய்கறிகளின் விலை அதிகமாக இருப்பதால் முட்டை அதிக அளவில் வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். இதன் காரணமாக முட்டை விலை உயர்ந்து வருகிறது.
வழக்கமாக ஹைதராபாத் மண்டலத்தில் நாமக்கல் மண்டலத்தை விட 20 காசுகள் அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது ஹைதராபாத் மண்டலத்தில் ரூ.5.16 காசுகளாக இருக்கிறது. இதுபோல் தான் தமிழ்நாட்டிலும் ரூ.5.16 காசுகளாக உள்ளது. இந்த விலையை ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் முட்டை விலை குறைவு தான். இந்த விலை ஏற்றத்தினால் முட்டை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க