புனல்வாசலில் மின்கம்பி அறுந்து விழுந்து 6 ஆடுகள் பலி.
நவம்பர் 30, 2017
0
பேராவூரணி அடுத்த புனல்வாசலில் மின் கம்பி திடீரென அறுந்து விழுந்ததில் 6 ஆடுகள் பலியாகின. ஆடுகளை ஓட்டிச்சென்ற மூதாட்டி அதிர்ஷ்டவசமாக சுதாரித்து கொண்டதால் உயிர் தப்பினார்.
பேராவூரணியை அடுத்த புனல்வாசல் தெற்குத்தெருவை சேர்ந்த விவசாயி சிமியோன் என்ற சின்னப்பன் (வயது 70) மனைவி சைனிஸ் மேரி (வயது 64) தனக்கு சொந்தமான ஆடுகளை அருகில் இருந்த தென்னந்தோப்பில் மேய்த்துக் கொண்டிருந்தார்.
மழை பெய்யவே மாலை 4.30 மணியளவில் ஆடுகளை ஓட்டிக்கொண்டு வீடு திரும்பினார். அப்போது, புதுப்பட்டினம் 1ம் நம்பர் வாய்க்கால் அருகே தெற்குப்பகுதி வயலின் மேல் செல்லும் உயர் அழுத்த மின் கம்பி திடீரென அறுந்து முன்னாள் சென்று கொண்டிருந்த ஆடுகள் மீது விழுந்துள்ளது. இதில் மூதாட்டி கண் எதிரே மின்சாரம் தாக்கி ஆடுகள் பலியானது. இதில் சுதாரித்து கொண்ட சைனிஸ் மேரி அதிர்ஷ்டவசமாக மயிரிழையில் உயிர் தப்பினார்.
இச்சம்பவம் குறித்து வருவாய்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. மேலும் சிமியோன் என்ற சின்னப்பன் மகன் ஜெரோம் திருச்சிற்றம்பலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க