தஞ்சையில் வடகிழக்குப்பருவமழையில் இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 65 மி.மீ. மழை பதிவானது.
நவம்பர் 16, 2017
0
தமிழகத்தில் வடகிழக்குப்பருவமழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் கடந்த 30-ந்தேதி வடகிழக்குப்பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம், திருவிடைமருதூர், அணைக்கரை பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. ஆனால் தஞ்சை உள்ளிட்ட பிற பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் தஞ்சையில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை கொட்டியது. 1 மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டியதால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தஞ்சையில் இதுவரை அதிகபட்சமாக 25 மி.மீ. அளவுக்குத்தான் மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையினால் தஞ்சையில் இந்த ஆண்டு வடகிழக்குப்பருவமழையில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 65 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. பலத்த மழையால் தஞ்சை வெண்ணாற்றில் தண்ணீர் தடுப்பணையை தாண்டி ஓடியது. நேற்று மழை இன்றி வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது. தஞ்சை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- அதிராம்பட்டினம் 5, கும்பகோணம் 20, பாபநாசம் 15.2, தஞ்சை 65, திருவையாறு 47, திருக்காட்டுப்பள்ளி 41, வல்லம் 39, கல்லணை 6, அய்யம்பேட்டை 23, திருவிடைமருதூர் 40.2, மஞ்சளாறு 3.2, நெய்வாசல் தென்பாதி 60.4, பூதலூர் 38.6, வெட்டிக்காடு 13.8, பட்டுக்கோட்டை 3.6, பேராவூரணி 2, அணைக்கரை 5.4, குருங்குளம் 6.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க