பேராவூரணி அருகே குத்தகை செலுத்தாத கோயில் நிலம் மீட்பு.
நவம்பர் 30, 2017
0
பேராவூரணி அருகே குத்தகை செலுத்தாத கோயில் நிலம் குத்தகைதாரர்களிடமிருந்து மீட்கப்பட்டது.
பேராவூரணி அருகே உள்ள ஆத்தாளூர் ஸ்ரீ வீரமாகாளியம்மன் திருக்கோயிலுக்குச் சொந்தமான ஏராளமான இடங்கள் பேராவூரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ளது. இதில் விவசாயம் மற்றும் தென்னந்தோப்புகள், கட்டடங்கள் உள்ளது. இந்த இடங்களுக்கு குத்தகைதாரர்கள் ஆண்டுதோறும் குத்தகை செலுத்தி வருகின்றனர். இதில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளுக்கு நாடாகாடு, கீழக்காடு, ஆத்தாளூர் வடக்கு பகுதியைச் சேர்ந்த 6 நபர்கள் நீண்ட நாட்களாக குத்தகை செலுத்தாமல் இருந்து வந்தனர்.
இதுகுறித்து கோவில் சார்பாக தஞ்சை வருவாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தனித்துணை ஆட்சியர் மஞ்சுளா உத்தரவின் பேரில் வருவாய் நீதிமன்ற அமலாக்க ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் குத்தகை செலுத்த தவறிய நிலத்தை மீட்டு திருக்கோவில் வசம் ஒப்படைத்தனர்.
இதில் திருக்கோயிலுக்கு பாத்தியப்பட்ட களத்தூர், தென்னங்குடி, முடப்புளிக்காடு, கழனிவாசல் கிராமங்களைச் சேர்ந்த பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க