அரசு பள்ளியில் மறந்த விளையாட்டை நினைவு கூறும் நிகழ்ச்சி.
நவம்பர் 02, 2017
0
புதுக்கோட்டை மாவட்டம் மறவாமதுரையில் உள்ள ஊராட்சி ஓன்றிய பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மறந்த விளையாட்டை நினைவுபடுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பள்ளியின் தலைமையாசிரியர் சதாசிவம் தலைமை வகித்து மறந்த விளையாட்டுகளை எடுத்துசொல்லி பயிற்சியும் அளித்தார்.
இதில் கூழான் கற்களில் கிச்சு கிச்சு தாம்பாழம், கண்ணாமூச்சி, சடுகுடு, தாயம், பரமபதம் நொண்டி, தாவி விளையாடும் (ஸ்கிப்பிங்), சைக்கில் டயர் வண்டி பந்தயம், பம்பரம், கயிறு ஆட்டம், பல்லாங்குழி, இச்சா இனியா போன்ற 20க்கும் மேற்பட்ட விளையாட்டுகளை பயிற்சியளிக்க மாணவர்கள் ஆர்வத்துடன் குழு குழுவாக சேர்ந்து விளையாடி மகிழ்ந்தனர். விரைவில் இவ்விளையாட்டுகளின் போட்டியும் பள்ளியில் நடக்க உள்ளது.
வெற்றியாளர்களுக்கு பரிசுகளும், வெகுமதியும் அளிக்கப்படுகிறது. இவ்விளையாட்டுகளை பார்வையிட்ட பார்வையாளர்கள் பெற்றோர்களும் பாராட்டி மகிழ்ச்சியினை தெரிவித்தனர். மறந்துபோன விளையாட்டை நினைவுகூறும் ஆசிரியர், உதவிஆசிரியர்கள் உதவிகரமாக இருந்து செயல்பட்டனர்.
இவ்விளையாட்டுகளை பற்றி மாணவிகள் கூறியபோது :
எங்களது வீட்டில் கூட இது போன்ற விளையாட்டுகளை விளையாடியது இல்லை. அந்த நேரங்களில் நாங்கள் தொலைக்காட்சி மற்றும் செல்போனை வைத்து கேம்ஸ் விளையாடுகின்றோம். எங்களது பள்ளிகூடத்தில் உள்ள ஆசிரியர்கள் மறந்துபோன விளையாட்டுகளை கற்றுக்கொடுத்து தாயம், நொண்டி ஆடுதல், பம்பரம் சுற்றுதல், டயர் வண்டி உருட்டுதல் இதுபோன்ற விளையாட்டுகளை விளையாடுவதால் எங்களுக்கு எந்தவிதமான காயங்கள் ஏற்படாமல் நன்கு விளையாடுகிறோம்.
மேலும் உடல் நலத்திற்கும் கண் பார்வைக்கும் உகந்ததாக உள்ளது என்றும் கூறினர்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க