பேராவூரணி அடுத்த கொள்ளுக்காடு நடைபெற்ற சுனாமி பயிற்சி ஒத்திகை.
நவம்பர் 25, 2017
0
தமிழகத்தில் டிசம்பர் மாதம் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் அது சார்ந்த வதந்திகள் சமூக ஊடகங்களின் வாயிலாக பரப்பப்பட்டு வருகிறது.
இதனை கருத்தில் கொண்ட பேரிடர் மீட்பு மேலான்மை வாரியம் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சுனாமி மீட்பு பயிற்சி வழங்கி வருகிறது.
தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் சார்பில் ஆந்திரம், மேற்கு வங்கம், தமிழகம், புதுச்சேரி, ஒடிஸா உள்ளிட்ட மாநிலங்களின் கடலோர மாவட்டங்களில் சில கிராமங்களைத் தேர்ந்தெடுத்து சுனாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கொண்ட மாதிரிப் பயிற்சி நடத்தப்பட்டது.
சுனாமி வரும் நிலையில், இந்தியப் பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்பின் மூலம் சுனாமி எச்சரிக்கை தொடர்பான முன் அறிவிப்புகள் இதில் பெறப்பட்டது.
இந்த அறிவிப்புகள் பாதிக்கப்படக் கூடிய மக்களுக்கு அரசுத் துறைகள் மூலமாக எவ்வாறு சென்று சேர்க்கப்படும் என்பது பற்றி இந்த ஒத்திகையின் போது சோதிக்கப்பட்டது.
இந்த ஒத்திகை பயிற்சியில் இந்திய ரெட்கிராஸ் சொசைட்டி மாவட்ட தலைவர் S.ராஜமாணிக்கம் , JRC மாவட்ட அமைப்பாளர் அ.பிச்சைமணி அதிராம்பட்டினம் IRCS கிளை தலைவர் மரைக்கா கே.இத்ரீஸ் அஹமத், JRC இணை அமைப்பாளர், பார்த்தசாரதி, கோட்டாட்சியர், வட்டாட்சியர், தஞ்சை மாவட்ட வருவாய்த்துறை ஆட்சியர்(DRO) கடலோர கமாண்டர், தீ தடுப்பு அலுவளர்கள் , கால்நடை அதிகாரிகள் ,சுகாதார அலுவலர்கள்,மற்றும் தொண்டு நிறுவனங்களின் உறுப்பினர்கள்ஆகியோர் கலந்துகொண்டு ஒத்திகை பயிற்சி சிறப்பாக நடைபெற உதவிபுரிந்தனர்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க