பேராவூரணி அருகில் உள்ள மல்லிபட்டினம் துறைமுக பகுதியில் சேறும், சகதியாக மாறிய சாலை சீரமைக்க கோரிக்கை.
நவம்பர் 14, 2017
0
பேராவூரணி அருகில் உள்ள மல்லிபட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் 200 விசைப்படகுகள் உள்ளன. அதுமட்டுமின்றி 500 நாட்டுபடகுகள் உள்ளது. விசைப்படகுகள் கடலுக்கு செல்லும் நாட்களில் படகுகளுக்கு தேவையான டீசல் மற்றும் தளவாட பொருட்கள் அத்யாவசியமாக கொண்டு செல்ல வேண்டும். மேலும் இங்கு பிடிக்கப்படும் மீன், இறால், நண்டு ஏற்றுமதி, இறக்குமதி செய்வதற்கென வாகனங்கள் துறைமுக பகுதிகளுக்கு வந்து செல்கின்றன. தற்போது துறைமுக விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளில் 200க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர் இவர்களுக்கென்று ஒப்பந்தக்காரர்கள் கழிப்பிட வசதிகள் செய்து கொடுக்காமல் துறைமுக பகுதிக்கு மீனவர்கள் செல்ல முடியாத அளவுக்கு அசுத்தமாக உள்ளது.
துறைமுக விரிவாக்க பணிகள் நடைபெறுவதால் துறைமுகத்துக்கு செல்லும் சாலையை மெட்டீரியல்கள் எடுத்து செல்லும் வாகனங்கள பயன்படுத்தி வருவதால் சாலைகள் சேதமடைந்து சேரும், சகதியுமாக காட்சியளிக்கிறது. சாலையோரங்களில் தளவாட பொருட்களையும் ஆக்கிரமித்து அடுக்கி வைத்துள்ளனர். இதனால் மீனவர்கள் துறைமுகத்துக்கு செல்ல வழியின்றி தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்றுமதி, இறக்குமதி வாகனங்கள் வருவதற்கு வழியின்றி வியாபாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. துறைமுக விரிவாக்க பணிகள் துவங்கும் முன்பாகவே மீனவர்கள் பயனடையும் வகையில் பயன்பாட்டு சாலை அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஒப்பந்தகாரர்களும் கண்டு கொள்ளவில்லை. எனவே மீனவர்களின் நலன் கருதி மல்லிபட்டினம் துறைமுக பகுதியில் பயன்பாட்டு சாலை அமைத்துத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நன்றி:தினகரன்
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க