பேராவூரணியில் ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்.
நவம்பர் 26, 2017
0
பேராவூரணியில் ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் மீதான பழிவாங்கும் போக்கை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தாசில்தார் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் நாகராஜ், ராஜசேகரன் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்டத் தலைவர் நாவலரசன் கோரிக்கை விளக்கவுரையாற்றினார். கிராம உதவியாளர் சங்க மாவட்டத் தலைவர் தங்கராசு, ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி சிவக்குமார் அனைத்து மருந்தாளுநர் சங்கம் ரமேஷ், தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சுவாமிநாதன், சத்துணவு ஊழியர் சங்க மாவட் டத் தலைவர் மனோகரன் உள்ளிட்ட பலர் பேசினர். முடிவில் அரசு ஊழியர் சங்க பேராவூரணி வட்ட துணைத் தலைவர் ரெங்கசாமி நன்றி கூறினார்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க