பேராவூரணியில் நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் மீண்டும் பேருந்துகளை இயக்க வேண்டும்.

Unknown
0


பேராவூரணியில் அரசுப் போக்குவரத்து கழகத்தால் நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் மீண்டும் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு வலியுறுத்தியுள்ளார்.பேராவூரணி சேதுசாலையில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுப் போக்குவரத்து கழக அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கிருந்து 28-க்கும் மேற்பட்ட பேருந்துகள், பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பேராவூரணி கிளை மேலாளராக லெட்சுமணன் என்பவர் பொறுப்பேற்றதில் இருந்து, பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்ட பேருந்துகள் திடீரென நிறுத்தப்பட்டு, சிறப்பு பேருந்துகள் என்ற பெயரில் வேறு தடங்களில் இயக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனைக்கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பொதுமக்கள் மற்றும் பல்வேறு இயக்கங்கள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்நிலையில் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு பேராவூரணி போக்குவரத்து கழக செயல்பாடுகள் குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம், தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் பரசுராமன் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் மீண்டும் நகரப் பேருந்துகளை இயக்கவும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட தொலைதூர வழித்தடங்களான, பேராவூரணியில் இருந்து கோவை, பழனி, சென்னை, திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு புதிய பேருந்துகளை இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

மேலாளர் மாற்றம்

இந்நிலையில் பேராவூரணி டெப்போ கிளை மேலாளராக பணியாற்றி வந்த லெட்சுமணன் மாற்றப்பட்டு,சுப்பிரமணியன் என்பவர் புதிதாக கடந்த அக்டோபர் 31 அன்று கிளை மேலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

பொதுமக்கள் கோரிக்கை

நிறுத்தப்பட்ட வழித்தடங்களான 343, 345, 9 ஏ, 96 பி, 15 உள்ளிட்ட தடங்களில் மீண்டும் பேருந்துகளை உடனடியாக இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள பொதுமக்கள், உரிய நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசுக்கு நன்றியை தெரிவித்துள்ளனர்.

 
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top