இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.
நவம்பர் 27, 2017
0
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்தியா இலங்கை அணிகள் இடையிலான, இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடந்தது. முதல் இன்னிங்சில் இலங்கை அணி 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, முரளி விஜய், (128 ரன்கள்), கேப்டன் விராத் கோலி இரட்டை சதம் (213 ரன்கள்), புஜரா (143 ரன்கள்), ரோகித் ஷர்மா (102 ரன்கள்) ஆகியோரின் சதத்தால் 610ரன்கள் குவித்தது. பின்னர் டிக்ளேர் செய்தது. 405 ரன்கள் பின் தங்கிய இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சமரவிக்ரமா (0), இஷாந்த் ஷர்மா பந்தில் நேற்று கிளீன் போல்டு ஆனார். இன்று நான்காவது ஆட்டம் தொடங்கியது. இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாத இலங்கை பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். கேப்டன் சண்டிமால் மட்டும் நிலைத்து நின்று 61 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியதால் இலங்கை அணி 166 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும;இழந்தது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ஜடேஜா தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர். மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க