பேராவூரணி அடுத்த இரண்டாம் புளிக்காட்டில் கோவில் அருகே உள்ள மதுக்கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Unknown
0


இரண்டாம்புளிக்காடு மல்லிபட்டிணம் சாலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன் மதுக்கடை திறக்கப்பட்டது. இதை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இதனால் இந்த கடையை 45 நாட்களில் அகற்றிவிடுவதாக சமாதான பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இந்த கெடு முடிந்ததால் மேற்கண்ட மதுக்கடை சுமார் 200 மீட்டர் தூரத்தில் உள்ள இரண்டாம் புளிக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட மறவனவயல் முனிக்கோவில் அருகில் திறக்கப்பட்டது.கோவில் அருகே மதுக்கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சார்பில் கோவில் பூசாரி அருணாசலம் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராசுவிடம் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கோவில் அருகே அமைக்கப்பட்டுள்ள மதுக்கடையை அகற்றாவிட்டால் சாலை மறியல் நடைபெறும் என அறிவித்து இருந்தார்.

மறியல அதன்படி நேற்று காலை 11 மணியளவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மதுக்கடையை அகற்றக்கோரி இரண்டாம் புளிக்காடு கடைவீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பட்டுக்கோட்டை தாசில்தார் ரகுராமன், கலால் தாசில்தார் கோபிநாதன், துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமலகண்ணன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது வருகிற 26-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) சமாதான பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என கூறினர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top