பேராவூரணி அடுத்த அதிராம்பட்டினம் கடல் சீற்றம் நாட்டுப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.
நவம்பர் 28, 2017
0
பேராவூரணி அடுத்த அதிராம்பட்டினம் கடற்பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டுவருவதால் பெரும்பாலான நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.தெற்கு வங்கக்கடலில் புயல் மையம் கொண்டுள்ளதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும்போது பாதுகாப்புடனும் கவனத்துடனும் செல்லவேண்டும் என மீன்வளத்துறையினர் மற்றும் கடலோர காவல் நிலைய போலிஸார்களும் மீனவர்களிடம் அறிவுறுத்திவருகின்றனர். இந்நிலையில் அதிராம்பட்டினம் கடல் பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக கடல் சீற்றத்துடன் காணப்படுவதோடு கடல் பகுதியில் மழை விட்டுவிட்டுபெய்தும் வருகிறது இதனால் அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை உள்ளிட்ட தஞ்சை மாவட்ட கடற்கரைப்பகுதியில் உள்ள விசைப்படகுகள் தவிர்த்து பெரும்பாலான நாட்டுப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச்செல்லவில்லை.இதுபற்றி ஏரிப்புறக்கரை கிராமத்தைச்சேர்ந்த மீனவர் ரவி என்பவர் கூறுகையில் எங்கள் கடல் பகுதியில் கடல் சில நேரங்களில் இயல்பாகவும் சில நேரங்களில் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது.இதனால் பெரும்பாலான நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச்செல்லவில்லை ஒரு சில மீனவர்கள் மட்டும் கரையோரத்தில் சிறிது நேரம் மீன்பிடித்துவிட்டு உடனடியாக கரைதிரும்பிவிடுகின்றனர் விசைப்படகு மீனவர்கள் மட்டுமே அதாவது விசைப்படகுகள் அதிக எடைகொண்டதும் அதிக திறன்கொண்டதும் என்பதால் காற்று மற்றும் கடல் சீற்றத்தால் எளிதில் கவிழ்ந்துவிட வாய்ப்பில்லை என்பதால்அவர்கள் மட்டும் மீன்பிடிக்கச்செல்லும் காலக்கெடு தினங்களில் சென்றுவருகின்றனர் என்றார்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க