கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்த தினம் இன்று.

Unknown
0


தமிழ் திரை உலகின் நகைச்சுவை மன்னராக திகழ்ந்து பகுத்தறிவு கருத்துக்களை எடுத்துரைத்து சிரிக்கவும் சிந்திக்கவும் செய்த நகைச்சுவையின் முடிசூடா மன்னன் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் 109 ஆவது பிறந்தநாள் தினம் இன்று.
கன்னியாகுமரி மாவட்டம் ஒழுகினசேரியில் 1908ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்தார். அவருக்கு இன்று 109வது பிறந்தநாள்.சிறு வயதில் நாடக கொட்டகைகளில் சோடா விற்கும் சிறுவனாக வேலை செய்து வந்தார். தனது சிறு வயதில் வறுமையால் வாடி பல துன்பங்களை சந்தித்தார். பின்னர் வில்லுப்பாட்டு கலையை கற்று நாடகங்களில் நடித்து தனது கலை துறை வாழ்க்கையை துவங்கினார். படிப்படியாக வளர்ந்த அவர் சொந்தமாக ஒரு நாடக கம்பெனியை துவங்கும் அளவிற்கு உயர்ந்தார். பின் கால சுழற்சிக்கு ஏற்ப தமிழ் திரைப்பட துறையில் கால்பதித்தார்.
1936 ஆம் ஆண்டு சதிலீலாவதி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். அதில் இருந்து தொடர்ச்சியாக 150க்கும் மேற்பட்ட படங்களில்நடித்தும் 48 பாடல்களுக்கு மேல் சொந்தமாக பாடியுள்ளார். நடிகர் மட்டுமல்லாமல் தன் நடிப்பின் மூலமாக அனைவரையும் சிரிக்க வைத்து சிந்திக்க செய்தவர் என்.எஸ்.கிருஷ்ணன்.
நடிப்பில் மட்டுமல்லாது நிஜ வாழ்க்கையிலும் தொடர்ந்த அவர் சமூக சீர்திருத்த கருத்துகளை அன்றைய காலத்திலேயே துணிச்சலோடு வெளிப்படுத்திய கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் மதுரத்தை திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்கை வாழ்ந்தார். தன் வருமானத்தின் பெரிய பகுதியை ஏழை எளிய மக்களுக்கு வழங்கி கொடை வள்ளலாக திகழ்ந்த அவர் 1957 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் தேதி தனது 49 ஆவது வயதில் காலமானார்.
அவர் மறைந்தாலும் தமிழ் திரை உலகில் அவர் புகழ் என்றும் அழியாமல் இருக்கும் அளவிற்கு சிறந்த கலைஞர் ஆக திகழ்ந்தார்.என்.எஸ் கிருஷ்ணனுக்கு பெருமை சேர்க்கும் விதமாக நாகர்கோவில் மணிமேடை சந்திப்பில் 1972ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர், கலைவாணருக்கு சிலை வைத்து சிறப்பு சேர்த்தார்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top