பேராவூரணி ஆனந்தவல்லி வாய்க்காலில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்.
நவம்பர் 19, 2017
0
பேராவூரணி ஆனந்தவல்லி வாய்க்காலில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுத்து. வாய்க்காலை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். பேராவூரணி தேர்வு நிலை பேரூராட்சியில் நகரின் மையத்தில் ஓடும் ஆனந்தவல்லி வாய்க்காலில் மருத்துவமனை கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதாரமற்ற சூழ்நிலை காணப்படுகிறது. பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரில் உள்ள ஆட்டோ நிறுத்தம் அருகில் இரவு நேரங்களில் ஊசி, மருந்து குப்பிகள், காலியான குளுக்கோஸ் பாட்டில் மற்றும் வயர் போன்ற கழிவுகள், ஆற்றிலும், கரையிலும் கொட்டப்படுகிறது.
இதனால் ஆட்டோ நிறுத்தத்திற்கு வரும் பொதுமக்கள் ஓட்டுநர்கள் காலில் ஊசி தவறுதலாக பட்டு காயம் ஏற்படுகிறது. மருத்துவ கழிவுகளால் துர்நாற்றமும் ஏற்படுகிறது. இதனால் இங்கு கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகளை அகற்றவும் மீண்டும் குப்பைகள் கொட்டப்படாமல் தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க