புதுக்கோட்டையில் புத்தக திருவிழா.
நவம்பர் 26, 2017
0
புதுக்கோட்டையில் நகர்மன்றத்தில் 2 ஆவது புத்தகத் திழருவிழா கோலாகலத்துடன் தொடங்கியது. அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள், மாவட்டத்திலிருந்து பல்வேறு பள்ளிகளின் மாணவ மாணவியர்கள் ஏராளமான பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புத்தக கண்காட்சியை பார்வையிட்டு எங்கும் கிடைக்காத புத்தகங்கள் இக் கண்காட்சியில் கிடைக்கிறது என்றும், பல்வேறு அரசியல் தலைவர்கள், ஏராளமான எழுத்தாளர்கள் எழுதிய நாவல்கள், எண்ணற்ற கவிதை தொகுப்பு நூல்கள், சிறுவர்களுக்கான சிறுகதை நாவல்கள், பல்வேறு நாட்டுப்புற பாடல் புத்தகங்கள், மேலும் சிறுகதை வீடியோ சிடிகள் போன்ற புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் குவிந்துள்ளது. இதனை பார்வையாளர்கள் பார்வையிட்டு தங்களுக்கு வேண்டிய புத்தகங்களை வாங்கி செல்கின்றனர். இது பற்றி அரசு பள்ளி மாணவி கௌரி கூறுகையில், இதுவரை நான் பல்வேறு கண்காட்சிகளுக்கு சென்றிருக்கிறேன் இது போன்ற புத்தக கண்காட்சிக்கு இப்போது தான் வருகிறேன் இங்கு வந்து பார்த்தால் எந்த புத்தகங்களை வாங்குவது என்று எனக்கே வியப்பாக இருக்கிறது. நான் கொண்டு வந்துள்ள பணத்திற்கு 5 புத்தகங்கள் மட்டும் வாங்கியுள்ளேன். மேலும் என் பெற்றோர்களை அழைத்து வந்து இன்னும் எனக்கு வாங்க வேண்டிய புத்தகங்களை வாங்கவுள்ளேன் என்றும் கூறினார். கண்காட்சியில் பள்ளி மாணவர்கள் சிலர் திருவள்ளுவர், அப்துல் கலாம், பாரதியார் போன்ற வேடங்களில் வருகை தந்து பார்வையிட்டனர். ஏராளமான சமூக ஆர்வளர்கள் பெண்கள் புத்தக கண்காட்சியை மாலையில் நடைபெறுகின்ற கலை நிகழ்ச்சிகளையும் பேச்சாளாகள் சொல்கின்ற கருதத்துகளையும் பார்வையிட்டு கேட்கின்றனர்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க