கனமழை எதிரொலி தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.
நவம்பர் 30, 2017
0
கனமழை காரணமாக நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 36 மணி நேரத்திற்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 50 முதல் 65 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீச அதிக வாய்ப்பு இருப்பதாகவும், கடல் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்தது. கனமழை காரணமாக நெல்லை,கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், நாகை மாவட்டம் வேதாரண்யத்திலும் நேற்றிரவு முதல் பரவலாக மழை பெய்தது. இதனையடுத்து மழை காரணமாக திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க