பேராவூரணி ஊராட்சி ஒன்றிய கிழக்கு தொடக்கப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி.
நவம்பர் 11, 2017
0
பேராவூரணி ஊராட்சி ஒன்றிய கிழக்கு தொடக்கப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. தலைமையாசிரியர் மாலதி தலைமை வகித்தார். உதவி தொடக்ககல்வி அலுவலர் தமிழ்செல்வி, கூடுதல் அலுவலர் அங்கயர்கண்ணி முன்னிலை வகித்தனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் பரமசிவம் வரவேற்றார். கண்காட்சியில் ஊராட்சி ஒன்றிய வடகிழக்கு தொடக்கப்பள்ளி முதலிடமும், கூப்புளிக்காடு பள்ளி இரண்டாமிடமும், கிழக்குப்பள்ளி மாணவர்கள் மூன்றாமிடமும் பிடித்தனர். மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க