பேராவூரணி பகுதியில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 12 மாட்டு வண்டிகள் பறிமுதல்.
டிசம்பர் 04, 2017
0
காட்டாறுகளில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 12 மாட்டுவண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதிகளில் காட்டாறுகளில் இருந்து அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் அள்ளி செல்வதாக கலெக்டர் அண்ணாத்துரைக்கு புகார் வந்தது.
இதை தொடர்ந்து கலெக்டர் உத்தரவின் பேரில் பேராவூரணி தாசில்தார் பாஸ்கரன் தலைமையில் வருவாய் துறையினர் அடங்கிய குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது காட்டாறுகளில் அனுமதியின்றி 12 மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிவந்தது தெரிய வந்தது. இதையடுத்து 12 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து பேராவூரணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க