வரலாற்றில் இன்று டிசம்பர் 19.

Unknown
0
டிசம்பர் 19 கிரிகோரியன் ஆண்டின் 353 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 354 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 12 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

324 – லிசீனியஸ் ரோமப் பேரரசன் பதவியைத் துறந்தான்.
1154- இங்கிலாந்தின் இரண்டாம் ஹென்றி முடிசூடினான்.
1606 – ஐக்கிய அமெரிக்காவின் 13 குடியேற்ற நாடுகளில் முதலாவதான வேர்ஜீனியாவின் ஜேம்ஸ்டவுன் நகரில் இங்கிலாந்தில் இருந்து மூன்று கப்பல்களில் ஆங்கிலேயர்கள் வந்திறங்கினர்.
1871 – யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக கத்தோலிக்க மதகுருப் பதவிகள் (ordination) வழங்கப்பட்டன.
1877 – யாழ்ப்பாணம், நெடுந்தீவில் வாந்திபேதி, மற்றும் சின்னம்மை நோய் பரவியதில் பலர் இறந்தனர்.
1907 – பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 239 பேர் கொல்லப்பட்டனர்.
1916 – முதலாம் உலகப் போர்: பிரான்சில் வேர்டன் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் ஜேர்மனியப் படைகளை பிரெஞ்சுப் படைகள் தோற்கடித்தன.
1941 – அடொல்ஃப் ஹிட்லர் ஜேர்மனிய இராணுவத் தலைவர் ஆனார்.
1961 – போர்த்துகீச குடியேற்ற நாடான டாமன் டையூ பகுதியை இந்தியா தன்னுடன் இணைத்துக்கொண்டது.
1963 – சன்சிபார் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்று சுல்தான் ஹமூட் பின் முகமது தலைமையில் முடியாட்சியைப் பெற்றது.
1967 – இரு நாட்களின் முன்னர் கடலில் நீந்தும்போது காணாமல் போன ஆஸ்திரேலியப் பிரதமர் ஹரல்ட் ஹோல்ட் இறந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
1972 – சந்திரனுக்கு கடைசித் தடவையாக மனிதரை ஏற்றிச் சென்ற அப்பல்லோ 17 பாதுகாப்பாக பூமி திரும்பியது.
1983 – உலகக்கோப்பை காற்பந்துப் போட்டியில் வழங்கப்படும் பரிசுக்கிண்ணம் பிரேசிலில் அந்நாட்டு காற்பந்தாட்ட அமைப்பின் தலைமையகத்தில் வைத்துத் திருடப்பட்டது.
1984 – ஹொங்கொங்கின் ஆட்சியை ஜூலை 1, 1997 இல் மக்கள் சீனக் குடியரசிடம் மீண்டும் ஒப்படைக்கும் ஒப்பந்தம் சீனத் தலைவர் டெங் க்ஸியாவோபிங், பிரித்தானியப் பிரதமர் மார்கரெட் தாட்சர் ஆகியோருக்கிடையில் கைச்சாத்திடப்பட்டது.
1986 – சோவியத் எதிர்ப்பாளி அந்திரேய் சாகரொவ் வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
1997 – இந்தோனீசியாவில் விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் 104 பேர் கொல்லப்பட்டனர்.
1997 – டைட்டானிக் திரைப்படம் வெளியானது.
2000 – யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் 3 வயதுக் குழந்தை உட்பட 8 பொதுமக்கள் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

பிறப்புக்கள்

1901 – ருடால்ப் ஹெல், ஜெர்மானிய கண்டுபிடிப்பாளர் (இ. 2002)
1906 – லியோனிட் பிரெஷ்னேவ், சோவியத் ஒன்றியத் தலைவர் (இ. 1982)
1922 – கே. அன்பழகன், தமிழக அரசியல்வாதி
1934 – பிரதிபா பாட்டீல், இந்தியாவின் 12வது குடியரசுத் தலைவர்
1974 – ரிக்கி பொன்ரிங், அவுஸ்திரேலியத் துடுப்பாட்டக்காரர்

இறப்புகள்

1111 – அல் கசாலி, இசுலாமிய மெய்யியலாளர் (பி. 1058)
1848 – எமிலி புராண்ட்டி, ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1818)
1927 – ராம் பிரசாத் பிசுமில், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1897)
2013 – டேவிட் ராஜேந்திரன், ஈழத்து வானொலி, மேடை நாடகக் கலைஞர் (பி. 1945)
2014 – எஸ். பாலசுப்பிரமணியன், திரைப்பட தயாரிப்பாளர், விகடன் குழும உரிமையாளர் (பி. 1936)

சிறப்பு நாள்

கோவா – விடுதலை நாள்
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top