டிசம்பர் 20 கிரிகோரியன் ஆண்டின் 354 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 355 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 11 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
69 – நீரோ மன்னனின் முன்னாள் தளபதியாக இருந்த வெஸ்பசியான் ரோமப் பேரரசனாகத் தன்னை அறிவிக்கும் பொருட்டு ரோம் நகரை அடைந்தான்.
1192 – சிலுவைப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டு விட்டு இங்கிலாந்து திரும்பும் வழியில் முதலாம் ரிச்சார்ட் ஆஸ்திரியாவின் ஐந்தாம் லியோபோல்டினால் கைது செய்யப்பட்டான்
1606 – வேர்ஜீனியா கம்பனியின் மூன்று கப்பல்கள் ஆங்கிலேயர்களை ஏற்றிக் கொண்டு வேர்ஜீனியாவின் ஜேம்ஸ்டவுனை நோக்கிக் கிளம்பியது. இதுவே அமெரிக்காக்களில் இடம்பெற்ற முதலாவது நிரந்தர ஆங்கிலக் குடியேற்றத் திட்டமாகும்.
1803 – பிரெஞ்சுகளிடம் இருந்து லூசியானா விலைக்கு வாங்கப்பட்டதைக் குறிக்க நியூ ஓர்லென்ஸ் நகரில் பெரும் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.
1844 – இலங்கையில் அடிமைகளை வேலைக்கமர்த்துவதற்கெதிரான சட்டமூலம் கொண்டுவரப்பட்டது.
1860 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: தெற்கு கரொலைனா ஐக்கிய அமெரிக்காவில் இருந்து வெளியேறிய முதலாவது மாநிலமானது.
1915 – முதலாம் உலகப் போர்: கடைசி அவுஸ்திரேலியப் படைகள் துருக்கியின் கலிப்பொலி நகரை விட்டுக் கிளம்பியது.
1917 – சோவியத்தின் முதலாவது இரகசியக் காவற்துறை “சேக்கா” அமைக்கப்பட்டது.
1942 – இரண்டாம் உலகப் போர்: கல்கத்தா ஜப்பானியர்களின் குண்டுத்தாக்குதலுக்கு உள்ளானது.
1943 – பொலிவியாவில் இராணுவப் புரட்சி நடந்தது.
1951 – அணுவாற்றலினாலான மின்சாரம் முதற்தடவையாக ஐடஹோவில் பிறப்பிக்கப்பட்டது. இது நான்கு மின்குமிழ்களை எரிக்கப் பயன்பட்டது.
1952 – ஐக்கிய அமெரிக்காவின் வான்படை விமானம் வாஷிங்டனில் மோதி வெடித்ததில் 87 பேர் கொல்லப்பட்டனர்.
1955 – கார்டிஃப் வேல்சின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது.
1960 – வியட்நாம் விடுதலைக்கான தேசிய முன்னணி அமைக்கப்பட்டது.
1973 – ஸ்பானியப் பிரதமர் “லூயிஸ் கரேரோ பிளாங்கோ” மாட்ரிட் நகரில் கார்க்குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.
1984 – இங்கிலாந்தில் சுரங்கத் தொடருந்துப் பாதையில் 1 மில்லியன் பெற்றோலியப் பொருட்களை ஏற்றிச் சென்ற சரக்கு தொடருந்து ஒன்று தடம் புரண்டு தீ பரவியதில் பலத்த சேதம் ஏற்பட்டது.
1987 – பிலிப்பீன்சில் பயணிகள் கப்பல் ஒன்று எண்ணெய்த் தாங்கிக் கப்பலுடன் மோதி மூழ்கியதில் 4,000 (அதிகாரபூர்வமாக 1,749) பேர் கொல்லப்பட்டனர்.
1988 – போதைப்பொருள் கடத்தலுக்கெதிரான ஐநா சாசனம் வியென்னாவில் கைச்சாத்திடப்பட்டது.
1989 – பனாமாவின் அதிபர் மனுவேல் நொரியேகாவைப் பதவிலிருந்து அகற்ற ஐக்கிய அமெரிக்கா தனது படைகளை பனாமாவுக்கு அனுப்பியது.
1995 – அமெரிக்க போயிங் விமானம் ஒன்று கொலம்பியாவில் மலை ஒன்றுடன் மோதியதில் 160 பேர் கொல்லப்பட்டனர்.
1999 – போர்த்துக்கல் மக்காவுவை மக்கள் சீனக் குடியரசிடம் கையளித்தது.
பிறப்புக்கள்
1901 – ராபர்ட் வான் டி கிராப், அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1967)
1925 – மகதிர் பின் முகமது, மலேசியாவின் முன்னாள் பிரதமர்
இறப்புகள்
1998 – அலன் லொயிட் ஹொட்ஜ்கின், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1914)