வரலாற்றில் இன்று டிசம்பர் 26.

Unknown
0
டிசம்பர் 26   கிரிகோரியன் ஆண்டின் 360 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 361 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் ஐந்து நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1776 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானியர் நியூ ஜெர்சியில் இடம்பெற்ற போரில் தோற்றனர்.
1792 – பாரிசில் பதினாறாம் லூயி மன்னனுக்கெதிரான கடைசி விசாரணைகள் ஆரம்பமாயின.
1793 – கைஸ்பேர்க் என்னும் இடத்தில் இடம்பெற்ற சமரில் பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியர்களைத் தோற்கடித்தனர்.
1811 – வேர்ஜீனியாவின் ரிச்மண்ட் நகரில் நாடக அரங்கில் இடம்பெற்ற தீவிபத்தில் வேர்ஜீனியாவின் ஆளுநர் ஜோர்ஜ் வில்லியம்ஸ்மித் இறந்தார்.
1825 – முதலாம் நிக்கலாஸ் மன்னனுக்கு எதிராக மூவாயிரத்துக்கும் அதிகமான ரஷ்ய இராணுவத்தினர் செனட் சதுக்கத்தில் திரண்டனர். இவர்களின் கிளர்ச்சி சார் மன்னனால் முறியடிக்கப்பட்டது.
1862 – ஐக்கிய அமெரிக்காவின் மினசோட்டாவில் 39 பேர் தூக்கிலிடப்பட்டனர்.
1870 – ஆல்ப்ஸ் மலைத்தொடரூடான 12.8-கிமீ நீள தொடருந்து சுரங்கப் பாதை அமைக்கப்பட்டது.
1882 – யாழ்ப்பாணம், மன்னார் உட்பட இலங்கையின் பல இடங்களிலும் பலத்த மழையுடன் சூறாவளி பெரும் சேதத்தை உண்டுபண்ணின.
1898 – ரேடியம் கண்டுபிடிக்கப்பட்டது.
1925 – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
1925 – துருக்கி கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறியது.
1933 – பண்பலை வானொலி காப்புரிமம் பெறப்பட்டது.
1944 – ஆங் சான் பர்மாவின் நவீன இராணுவத்தை உருவாக்கினார்.
1943 – இரண்டாம் உலகப் போர்: நோர்வேயில் ஜேர்மனிய போர்க்கப்ப்பல் ஷார்ன்ஹோஸ்ட் பிரித்தானியக் கடற்படையினால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது.
1948 – கடைசி சோவியத் இராணுவம் வட கொரியாவில் இருந்து விலகியது.
1973 – சோவியத்தின் சோயூஸ் 13 விண்கலம் ஒரு வார பயணத்தின் பின் பூமி திரும்பியது.
1974 – சோவியத்தின் சல்யூட் 4 விண்கலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
1976 – நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) அமைக்கப்பட்டது.
1979 – சோவியத் விசேட படையினர் ஆப்கானிஸ்தானின் அதிபர் மாளிகையைக் கைப்பற்றினர்.
1985 – கொரில்லா பற்றி ஆய்வுகள் நடத்திய அமெரிக்கப் பெண் டயான் ஃபொசி கொல்லப்பட்டார்.
1986 – உலக மக்கள்தொகை 5 பில்லியனை எட்டியது (www.ibiblio.org).
1991 – சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது.
1998 – அயர்லாந்து, வடக்கு இங்கிலாந்து மற்றும் தெற்கு ஸ்கொட்லாந்தில் இடம்பெற்ற புயலால் பலத்த சேதம் ஏற்பட்டது.
2003 – தென்கிழக்கு ஈரானில் பாம் நகரில் ஏற்பட்ட 6.6 ரிக்டர் நிலநடுக்கத்தால் பல்லாயிரக்கணக்கானோர் மாண்டனர்.
2004 – இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட 9.3 ரிக்டர் அளவு நிலநடுக்கம், சுனாமி ஆழிப்பேரலையை ஏற்படுத்தி இலங்கை, இந்தியா, இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, மாலை தீவுகள் ஆகிய நாடுகளில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. 300,000 பேருக்கு மேல் இறந்தனர்.
2006 – சதாம் உசேனின் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டு மரணதண்டனை உறுதி செய்யப்பட்டது.

பிறப்புகள்

1791 – சார்ள்ஸ் பாபேஜ், ஆங்கிலேய கணிதவியலாளர் (இ. 1871)
1880 – எல்ரன் மாயோ, ஆஸ்திரேலிய உளவியலாளர் (இ. 1949)
1893 – மா சே துங் சீன மக்கள் குடியரசின் முதல் தலைவர், பொதுவுடமைவாதி (இ. 1976)

இறப்புகள்

1530 – ஸாகிருதீன் பாபர், இந்தியாவில் முகலாய வம்சத்தை உருவாக்கியவன் (பி. 1483)
1972 – ஹரி ட்ரூமன், 33வது அமெரிக்காவின் 33வது அதிபர் (பி. 1884)
1999 – சங்கர் தயாள் சர்மா, முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் (பி. 1918)
1981 – சாவித்திரி, தென்னிந்தியத் தமிழ்த் திரைப்பட நடிகை
1985 – டயான் ஃபாசி, கொரில்லாவைப் பற்றி ஆய்வுகள் நடத்திய அமெரிக்கப் பெண் (பி. 1932)
2006 – ஜெரால்ட் ஃபோர்ட், ஐக்கிய அமெரிக்காவின் 38வது அதிபர் (பி. 1913)

சிறப்பு நாள்

பொதுநலவாய நாடுகள் – பொக்சிங் நாள்
கேரளா – சபரிமலையில் மண்டல பூஜை
குவான்சா – முதல் நாள் விழா

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top