தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களுடன் சாலை பாதுகாப்பு குறித்து கலந்தாலோசனைக் கூட்டம் ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தலைமையில் வியாழனன்று நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: கண்டியூர் கிராமத்தில் தஞ்சாவூர் - அரியலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை செல்லும் சுற்றுக்குளக்கரை பகுதி யில் அடிக்கடி சாலை விபத்து ஏற்பட்டு வருகிறது. இவ்விடத்தில் சாலையை இரண்டாக பிரித்து நடுவில் சென்டர் மீடியன் அமைக்க தேசிய நெடுஞ்சாலை கோட்டப் பொறியா ளரிடம் அறிவுறுத்தினார்.செங்கிப்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலை- 67 அமைந்துள்ள பகுதிகளில் பூதலூர் பிரிவு சாலை, வளம்பக்குடி பிரிவு சாலை, புதுக்குடி பிரிவு சாலை ஆகிய இடங்களில் சாலையில் மாடுகள் திடீரென்று சாலையை கடப்பதால் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுகின்றன. மேலும் சாலையை பொது மக்கள் கடக்கும் போதும் அதிகவேகமாக வரும் வாகனங்களால் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பும், பொருள் சேதங்களும் ஏற்படுகின்றன. தேசிய நெடுஞ்சாலையில் ஒயிட் மார்க்கர் மற்றும் எச்சரிக்கை விளக்கு அமைக்கவும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குநரிடம் அறிவுறுத்தினார்.தஞ்சாவூர் - பூதலூர் நெடுஞ்சா லை மற்றும் செங்கிப்பட்டி –- திருக்காட்டு ப்பள்ளி நெடுஞ்சாலையில் பொது மக்கள் அதிக அளவில் சாலையை கடந்து செல்லும் சமயங்களில் அதிக அளவில் விபத்துக்கள் நடக்கின்றன. எனவே ஆவாரம்பட்டி பிரிவு சாலை, பாரா முனீஸ்வரர் கோயில், சஞ்சீவபுரம் பேருந்து நிறுத்தம், பூதலூர் நான்கு ரோடு மற்றும் சித்திரக்குடி மெயின் ரோடு ஆகிய இடங்களில் விபத்து எச்சரிக்கை பலகையும், வேகத்தடை அமைக்கவும் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளரிடம் அறிவுறுத்தி னார்.கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில் அண்மையில் பெய்த மழை காரணமாக சாலையில் ஆங்காங்கே பள்ளம் விழுந்துள்ள இடங்களில் சீர் செய்ய தேசிய நெடுஞ்சாலை கோட்ட பொறியாளரிடம் அறிவுறுத்தினார்.கும்பகோணம் உட்கோட்டத்தில் அடிக்கடி சாலை விபத்து நடைபெறும் இடங்களை கண்டறியப்பட்டுள்ள கோவிலஞ்சேரி, திருவலஞ்சுழி பகுதிகளில் மிளிரும் பலகை, மிளிரும் வேகத்தடை வண்ணக்கோடுகள் அமைத்திட தேசிய நெடுஞ்சாலை கோட்டப்பொறியாளரிடம் அறிவுறுத்தி னார்.தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு சாலை விபத்தில் 432 பேர் இறந்துள்ளனர். 2017 நவம்பர் மாதத்தில் தஞ்சாவூரில் 65 சாலை விபத்துக்களும், பட்டுக்கோட்டையில் 45 சாலை விபத்துக்களும், கும்பகோணத்தில் 31 சாலை விபத்துகளும் என நவம்பர் மாதத்தில் 141 சாலை விபத்துகள் நடந்துள்ளது. இதில் 14 நபர்கள் இறந்துள்ளனர். சாலை விபத்துகளை தவிர்ப்பதற்கு பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த காவல் துறையினர், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் விழிப்புணர்வு பணியில் ஈடுபட வேண்டும் என்றார்.