பேராவூரணி பேருந்து நிலையம் அருகே எம்.எஸ்.விழா அரங்கில், வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட திட்ட அலுவலர் டி.ராஜ்குமார் தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி.சௌந்தரராஜன் முன்னிலை வகித்தார். அவர் பேசுகையில்," கர்ப்பிணி பெண்களுக்கு என அரசு ரூ 18 ஆயிரம் வழங்குகிறது. பெண்கள் கர்ப்ப காலத்தில் சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். தொடர்ந்து மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
சர்க்கரை, இரத்த அழுத்தம், போன்றவை சீராக உள்ளதா என்றும் குழந்தையின் வளர்ச்சி ஆகியவற்றையும் மருத்துவர்களிடம் சென்று கண்காணிக்க வேண்டும்.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் குழந்தை பெறும் தாய்மார்கள், அங்கேயே தங்கள் குழந்தைகளின் பிறப்பு சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்" என்றார்.
இந்நிகழ்ச்சியில் டாக்டர் தீபா, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் அனுசூயா, பத்மாவதி, மேற்பார்வையாளர் ராணி, இந்திரா காந்தி, மருத்துவமில்லா மேற்பார்வையாளர் கண்ணன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகரன், மருந்தாளுநர் சரவணன் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.வளைகாப்பு திருவிழாவில் 120 கர்ப்பிணி பெண்களுக்கு மாலை, வளையல் அணிவிக்கப்பட்டு, சீர்வரிசைகளுடன் சத்தான உணவு வழங்கப்பட்டது.
பேராவூரணி பேருந்து நிலையம் அருகே எம்.எஸ்.விழா அரங்கில், வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு திருவிழா.
டிசம்பர் 16, 2017
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க