மருங்கப்பள்ளம் சேதமடைந்த மின் கம்பத்தை மாற்ற கோரிக்கை.

Unknown
0
பேராவூரணி அடுத்த மருங்கப்பள்ளம் ஊராட்சியில், பேராவூரணி- சேதுபாவாசத்திரம் சாலையில், கைலான்குளம் மயானம் எதிரே எட்டுக்கும் மேற்பட்டமின்கம்பங்கள் முழுமையாகவும், பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. மின்கம்பங் களில் ஊடாக உயர் அழுத்தமின்கம்பிகள் செல்கின்றன. வரிசையாக உள்ள மின்கம் பங்கள் அனைத்தும் சிமெண்ட் காரைகள் பெயர்ந்துஎலும்புக்கூடாக காட்சி அளிக்கிறது. அருகிலேயே பெரிய அளவிலான மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) உள்ளது. மேலும் உயர் அழுத்தமின்கம்பிகள் செல்லும்பாதையில் தென்னந்தோப்புகள் உள்ளன. தென்னை மட்டைகள் மின்கம்பங்கள் மீதுவிழுந்தாலோ, மழைக்காலமாக இருப்பதால் சற்று வேகமாக காற்று வீசினாலோ மின்கம்பங்கள் உடைந்து விழும் அபாயம் உள்ளது.

எனவே சேதமடைந்துள்ள அனைத்து மின்கம்பங்களையும் மாற்றி, புதிதாக அமைத்துத்தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி சேதுபாவாசத்திரம் ஒன்றியச்செயலாளர் ஆர்.எஸ்.வேலுச் சாமி கூறுகையில், மருங்கப் பள்ளம் ஊராட்சியில், கைலான்குளம் மயானம் எதிரிலும், முக்கியத்துவம் வாய்ந்த முசிறி- சேதுபாவாசத்திரம் சாலையிலும், மருங் கப்பள்ளம் ஊராட்சியில் பலஇடங்களிலும் மின்கம்பங் கள் சேதமடைந்துள்ளன. மின்வாரிய அதிகாரிகள் மின் பாதையை முறையாக ஆய்வு செய்வதில்லை. எனவே பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர்அதிகாரிகள் மின்கம்பங் களை மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.



Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top