பேராவூரணி தாலுக்கா அலுவலகம் முன்பு வருவாய் நிர்வாக சுற்றறிக்கை அனுப்பியதை கண்டித்து விஏ.ஓ.சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின்
வட்டார கவுரவத் தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். வட்டார தலைவர் செல்வம் வரவேற்றார், மாநில நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல், அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், போராட்டத்தை சீர்குலைக்கும் விதமாக மாவட்ட வாரியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பிய வருவாய் நிர்வாக ஆணையரை கண்டித்தும், அரசாணைகளை அமல்படுத்தவும், கூடுதலாக பொறுப்பு ஏற்கும் கிராமங்களுக்கு பொறுப்பூதியம் வழங்கவும், வி.ஏ.ஓ அலுவலர்களுக்கு மாவட்ட மாறுதல் வழங்கவும், உட்பிரிவு பட்டா மாறுதலுக்கு விஏஓக்கள் பரிந்துரையை அமல்படுத்தவும், இணையவழிச் சான்றுகளுக்கு உரிய படியினை உடனடியாக வழங்க வேண்டும், ஆன்லைன் வசதிகளை வழங்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் செயலாளர் சக்திவேல், பொருளாளர் மருததுரை, மாவட்ட துணைத்தலைவர் ரத்தினவேல், மாவட்ட இணைச் செயலாளர் ராஜசேகர், வட்டார துணைச்செயலாளர் முத்துக்கிருஷ்ணன் நன்றி கூறினார்.
பேராவூரணி தாசில்தார் அலுவலகம் முன்பு வி.ஏ.ஓ சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.
டிசம்பர் 23, 2017
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க